பரிசும், பரிசின் புறநகர்ப்பகுதிகளும் வெள்ளத்தை எதிர்நோக்கத் தயாராகின்றது.
செய்ன் மட்டுமல்ல, Aube, Marne, Jura,Saône-et-Loire ஆகிய ஆற்றுநதிகளும் வெள்ளப்பெருக்கு ஆபத்தில் உள்ளன.
15 மாவட்டங்கள் மிகவும் தீவிரமான வெள்ள எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளன.
முக்கியமாக Yvelines மாவட்டம் பெரும் வெள்ளத்தை எதிர்நோக்கத் தாயர்ப்படுத்தலில் ஈடுபட்டுள்ளன. தீயணைப்புப் படைகள் மற்றும் இராணுவத்தினர் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பரிஸ் நகரமத்தியில், செய்ன் நதியின் மட்டம் இன்றிரவிலிருந்து, இறுதியில் உயர்ந்து, ஆபத்து ஏற்படுமா என்ற விழிப்புணர்வில் தாயர் நிலையில்ல் உள்ளன. பரிஸ் மற்றும் செய்ன் நதியோர நகரங்கள் தொடர்ந்தும் செய்திகளை அவதானிக்குமாறும், பரிஸ் நகரபிதா அன் இதால்கோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.