வெள்ளிக்கிழமை பிரான்ஸ் Vincennes மிருகக்காட்சி சாலையை விட்டு நான்கு குரங்குகள் தப்பித்துள்ளன. காவல்துறையினர் அவற்ற பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக மிருகக்காட்சி சாலையை தொடர்புகொண்டு கேட்டபோது, ஐம்பது குரங்குகள் வரை வெளியேறியதாகவும், அவற்றில் நான்கு குரங்குகளை திரும்ப பிடிக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். ஆபத்துக்களை தவிர்க்கும் முகமாக, அங்கிருந்த அனைத்து பார்வையாளர்களையும் காவல்துறையினர் வெளியேற்றினர்.
நண்பகலுக்கு பின்னர் நிலமை கட்டுக்குள் வந்தாகும், குரங்குகளை மீட்கமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.