ஜி.எஸ்.டி., வசூல், 2017 டிசம்பரில், 86 ஆயிரத்து, 703 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, 2017 ஜூலை முதல் அமலுக்கு வந்தது. நேற்று முன்தினம் வரை, ஒரு கோடி பேர், ஜி.எஸ்.டி., கீழ், தங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், 2017 செப்டம்பரில், 92 ஆயிரத்து, 150 கோடி ரூபாய் வரி வசூலானது; அக்டோபரில், 83 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது; நவம்பரில், 80 ஆயிரம் கோடி ரூபாயாக மேலும் குறைந்தது.
இந்த நிலைமையில், தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிசம்பரின், ஜி.எஸ்.டி., 86 ஆயிரத்து, 703 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.