பாலிவுட்டில் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் தான் விஷால் பரத்வாஜ். சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பஹத் பாசில் நடித்துள்ள ‘கார்பன்’ படத்திற்கு இவர்தான் இசையமைத்துள்ளார்.
பாலிவுட்டில் தனது வேலைகளை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு மலையாள சினிமாவுக்கு வந்து இசையமைக்க இயக்குனர் வேணுவும் நாயகன் பஹத் பாசிலும் தான் காரணமாம்.
இந்தப்படத்தில் பஹத் பாசிலின் அற்புதமான நடிப்பை பார்த்துவிட்டு, அடுத்தததாக தான் பாலிவுட்டில் இயக்கவுள்ள படத்திற்கு பஹத் பாசில் தான் ஹீரோவாக நடிக்கவேண்டும் என அன்புக்கட்டளை போட்டுள்ளாராம் விஷால் பரத்வாஜ்.