மலையாள இயக்குனர்கள் பாலிவுட்டில் படம் இயக்குவது என்பது அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. இயக்குனர் பிரியதர்ஷன், சித்திக் ஆகியோர் இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். இந்தநிலையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் தனது அடுத்த படத்தை பாலிவுட்டில் தான் இயக்கவுள்ளாராம்.
தற்போது மோகன்லால் மகனை வைத்து இவர் இயக்கியுள்ள ‘ஆதி’ படம் நாளை வெளியாகிறது. இதை தொடர்ந்து பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மியை ஹீரோவாக வைத்து படம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். இது ஒரு ஹாலிவுட் த்ரில்லரின் ரீமேக்காக இருக்கும் என்று சொல்லபடுகிறது.
இவர் இயக்கிய ‘த்ரிஷ்யம்’ படம், பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டாலும், மற்ற மொழிகளைப்போல பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.