உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாரணாசியில் உள்ள திரையரங்கு வளாகத்திற்குள் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை மீட்டு காவலில் வைத்துள்ளனர்.