ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான குறிப்புகளை விசாரணை ஆணையத்தில் அளித்துள்ளதாக மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.தேவைப்பட்டால் விசாரணைக்கு அடுத்த மாதம் வர வேண்டியிருக்கும் என்றும் மருத்துவ குறிப்பு சார்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.ஜெயலலிதா கைரேகை தொடர்பான விவகாரம் குறித்து விளக்கம் தர மருத்துவர் பாலாஜி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.