அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
பென்டன் நகரத்தில் உள்ள மார்ஷல் கவுண்டி உயர்நிலை பள்ளியில் நேற்று முன் தினம் காலை 8:00 மணிக்கு 15 வயதுடைய மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 வயதுடைய ஆண்,பெண் இருவரும் பலியாயினர். சம்பவம் நடந்த 15 நிமிடத்தில் மாணவரை போலீசார் கைது செய்தனர்.
வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு முன்பு பள்ளியில் உள்ள பொதுப் பகுதியில், அந்த மாணவர் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இறந்துபோன இருவர் உட்பட 14 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. கிட்டதட்ட 1,150 படிக்கும் இப்பள்ளியின் மாணவரான ஜேசன் ஹால்,”மாணவர்கள் கீழே விழுந்ததை நான் பார்த்தேன்.
எங்குப் பார்த்தாலும் ரத்தமாக இருந்தது. சூழ்நிலை மோசமாக இருந்தது” என்கிறார். மிகச்சிறிய நடந்த நகரத்தில் நடந்த இச்சம்பவம், அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.