செய்ன் நதியின் நீர் மட்டத்தினால் வல்-து-மார்னில் உள்ள வில்நெவ்-சன்-ஜோர்ஜ் நகரம் பேராபத்திற்கு உள்ளாகியுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் முக்கியமாகப் பாதிக்கப்படும் நகரமாக Villeneuve-Saint-Georges (Val-de-Marne) உள்ளது.
இதனைத் தொடர்ந்து இதே செய்ன் நதிக் கரையோரத்தில் உள்ள Yerres நகரமும் ஆபத்தில் உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் பல பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது
வெள்ளம் ஏற்பட்டால், Yerres செய்ன் நதியின் பகுதியில், பாதிப்பிற்குள்ளாகும் வகையில் 1200 பேரும், வில்நெவ்-சன்-ஜோர்ஜின் Triage பகுதியில் பாதிப்பிற்குள்ளாகும் வகையில் 2000 பேரும் உள்ளனர்.
இதனால் இன்றிலிருந்து இராணுவ வாகனங்களும் இராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளதாக கொம்யூனிஸ்ட் கட்சியின் நகரபிதா Sylvie Altman தெரிவித்துள்ளார்.
வெள்ளம் அளவிற்கு மீறினால் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.