முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 வாக்காளர்கள் தபால் மூலம் தமது வாக்குகளைப் பதிவுசெய்தனர். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் தபால் மூலம் வாக்களித்தனர்.
முல்லைதீவு மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிப்பதுக்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 122 பேர் விண்ணப்பித்திருந்தனர். 26 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 96 பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 190 பேர் விண்ணப்பத்திருந்தனர். 24 பேர் நிராகரிக்கப்பட்டு, 166 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் 903 பேர் விண்ணப்பித்தனர். 126 பேர் நிராகரிக்கப்பட்டு, 777பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். கரைதுறைபற்று பிரதேச செயலக பிரிவில் 1032 பேர் விண்ணப்பித்தனர். 113 பேர் நிராகரிக்கப்பட்டனர். 919 பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.அந்தவகையில் மாவட்டத்தின் மொத்த தபால்மூல வாக்காளர் எண்ணிக்கை 2247 ஆகும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 289. ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் 1958 ஆகும்.