நாடு முழுவதும் 22 நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடு தொடர்பான ஊழல் புகார் மீதான விசாரணைகள் ஊழல் கண்காணிப்பு ஆணையரின் ஒப்புதலுடன் முடித்துக் கொள்ளப்படுவதாக சுப்ரீம ்கோர்ட்டில் சிபிஐ தெரிவித்துள்ளது. கடந்த 1993ம் ஆண்டு முதல் 2005 வரையிலான கால கட்டத்தில் 43 நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.
இது தொடர்பான விசாரணை அறிக்கை அண்மையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மதன் பி லோகூர், குரியன் ஜோசப், ஏ. கே. சிக்ரி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மொத்தமுள்ள 43 சுரங்க ஒதுக்கீடுகளில் 21 சுரங்கங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள 22 சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விசாரணைகள், ஊழல் கண்காணிப்பு ஆணையரின் ஒப்புதலுடன் முடித்துக் கொள்ளப்பட்டன. பதிவு செய்யப்பட்ட 16 வழக்குகளில் 7 வழக்குகளின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை கடைசியாக சுப்ரீம ்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ மீது நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்தது குறிப்பிடத்தக்கது.