ஒரு வருடத்தில் சராசரியாக 4000 தாக்குதல்கள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது நடத்தப்படுகின்றன என அதிர்ச்சித்தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த சில வருடங்களில் இருந்து தொடர்ச்சியாக சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்ற போதும், இவ்வருடம் ஜனவரி 11 ஆம் திகதி பா-து-கலேயின் Vendin-le-Vieil சிறைச்சாலையில் இடம்பெற்ற அதிகாரி மீதான தாக்குதலைத்தொடர்ந்து இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் 6 சிறைச்சாலைகளுக்கும் மேல் கைதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகள் இன்று முழுநேர பணி பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 7 வருடங்களில் தொடர்ச்சியான ஒவ்வொரு வருடத்திலும் 4000 தாக்குதலுக்கு குறையாமல் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் 3,923 தாக்குதல் சிறைச்சாலை அதிகாரிகள் மீது நடத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 2012 ஆம் ஆண்டில், 4,402 தாக்குதல்கள் நாடுமுழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.