தாய்லாந்து நாட்டில் வெடி குண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர். அங்குள்ள மார்க்கெட் பகுதியை குறிவைத்து மோட்டார் சைக்கிள் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடத்தில் தாக்குதல் நடந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் யலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யலா மாகாணத்தில், கடந்த 2 ஆண்டுகளில் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. கடந்த 2004-ம் ஆண்டு முதல், இப்பகுதியில் ஏற்படும் வன்முறைகளால் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.