இன்று திங்கட்கிழமை, 22ம் திகிதி அரசாங்கத்தின் நிதித் தணிக்கை அறிக்கையின் (Cour des Comptes) வாசிப்பின்போது, 2019 இற்கு முதல் ஓய்வூதியச் சீர்திருத்தம் (réforme des retraites) மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
‘மிகவும் பாரிய கோவைகளைக் கொண்ட, பெரும் சிக்கல்களையும் அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தக்கூடிய, இந்த ஓய்வூதியச் சீர்திருத்தம், 2019ஆம் ஆண்டு கோடைகாலத்தின் முன்னர் மேற்கொள்ளப்படல் வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் உள்ள முப்பதிற்கும் மேற்பட்ட வித்தியாசமான ஓய்வூதிய வகைகளை (régimes de retraite) ஒன்றிணைத்து, ஒரே பொது ஓய்வூதிய அமைப்பாக மாற்றுவேன் என ஜனாதிபதித் தேர்தலின் போது எமானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.