அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 10 வயது மகளின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளை படித்துவிட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தனது பெயர் மற்றும் தனது மகளின் பெயரை குறிப்பிட விரும்பாத அந்த தாய் கூறியதாவது, எனது மகள் செல்போன் பயன்படுத்துகிறான். வீட்டில் உள்ளவர்களுடன் அவசர நேரத்தில் பேசுவதற்கும், கணிணி விளையாட்டுகளை விளையாடுவதற்கும் மட்டுமே அவளுக்கு அது வாங்கி கொடுக்கப்பட்டது.
ஆனால், அவளது செல்போனில் இருந்த குறுஞ்செய்திகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவளது வயதுக்கு மீறிய பேச்சுகளை தனது நண்பனின் பேசியுள்ளார்.
அதுவும், பாலியல் சம்பந்தமான உரையாடல். நிர்வாண புகைப்படத்தை தனது ஆண் நண்பனுக்கு அனுப்புவதற்காக அவனிடம் உரையாடல் நடத்தியுள்ளாள். உனக்கு புகைப்படம் வேண்டுமா என்று அந்த பையனை ஏமாற்றுகிறாள்.
அவனும், உடனே அனுப்பு அதற்காக காத்திருக்கிறேன் என் அந்த உரையாடல் தொடர்ந்துள்ளது. முழுக்க முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேசுவது போன்று அந்த உரையாடல் இருக்கிறது எனக்கூறியுள்ள தாய், எனது மகளிடம் இருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை.
இளம் வயதிலேயே சமூகவலைதளங்களின் மூலம் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த விடயத்தில் நான் எனது மகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
ஏனெனில், நான் கண்டிப்புடன் நடந்துகொண்டால், இது அவளது மனதில் எதிர்வினையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் மொபைல் பயன்படுத்தினால், அவர்களை கண்காணிக்க வேண்டும், இந்த விடயத்தில் பெற்றோர்களுக்கு அதிக எச்சரிக்கை தேவை என கூறியுள்ளார்.