கதிர்காமம் நகர் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் ஆணையை மீறி சென்றவர் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (20) இரவு 10.55 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குறித்த சம்பவத்தில் கதிர்காமம் நாகஹ வீதியைச் சேர்ந்த 44 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபர், கதிர்காமம் கந்த வீதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கதிர்காமம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரினால் நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டள்ளதாகவும், இதன்போது குறித்த நபர் அவர்களது உத்தரவை மீறி சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்ற நிலைமை ஒன்ற எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.