காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. ஜம்முவின் ஆர். எஸ். புரா பிரிவில் அமைந்த எல்லை பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் பாகிஸ்தான் படையினர் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்காக கொண்டு அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலடியாக எல்லை பாதுகாப்பு படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் படை ஆர்னியா பகுதி மற்றும் பல்வேறு கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தமிழக வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறுகையில், அண்டை நாடுகளுக்கு இந்திய இராணுவம் கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும். நமது ராணுவத்தினர் ஒருவர் இறந்தால் பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேர் பலியாக வேண்டும் என்றார்.
கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரின் போது இந்திய ராணுவத்தின் கேப்டனாக அமரிந்தர் சிங் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
.