பிரான்ஸ் – கைமாறிய வெலிப் (Vélib) ஈருருளி வாடகை நிறுவனத்தைக் கையில் எடுத்த Smovengo நிறுவனம், புதிய வெலிப் ஈருருளி தரிப்பிட நிலையங்களை உருவாக்குவதில் பெரும் காலதாமதம் செய்து வருகின்றது.
இதற்கான வேலைகள் மிகவும் துரிதமாக நடாத்தப்பட உள்ளதாக Smovengo நிறுவனத்தின் தலைவர் Jorge Azevedo தெரிவித்துள்ளார்.
வாரத்திற்கு 60 ஈருருளி நிலையங்கள் என்ற விகிதத்தில் மிகவேகமாகத் தாங்கள் வேலை செய்வதாகவும், எதிர்வரும் மார்ச் 31ம் திகதிக்குள் 1400 நிலையங்களைப் பரிசிற்குள்ளும் புறநகர்ப் பகுதிகளிற்குள்ளும் நிறுவிவடுவதாக இவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இந்தக் கால எல்லையைத் தாண்டினால், இவர்கள் மீது, அரசாங்கம், ஒரு மில்லியன் யூரோக்கள் வரை குற்றப்பணம் விதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.