மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சின் செயலாளருடன் (18) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.