பலாங்கொடை, பின்னவல பகுதியில் பாடசாலையொன்றில் பணிபுரிபுரிந்த ஊழியர்கள் இருவர் மீது மண் மேடு இடிந்து விழுந்ததில் இருவரும் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை கட்டட நிர்மாண பணிகள் இடம்பெற்று வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த 30 மற்றும் 34 வயது நபர்களை இருவரும் பின்னவல பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.