கடந்த 18 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக இலங்கையில் நிலப்பரப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கொழும்பு நகரில் உருவாக்கப்படும் துறைமுகநகர திட்டம் காரணமாக, புதிதாக 2.6 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு இலங்கையுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புவியில் வரைப்படம் 18 ஆண்டுகளின் பின்னர் வரையப்படுகின்றது. புதிய வரைபடம் 1: 50,000 என்ற அளவு திட்டத்தில் வரையப்படவுள்ள நிலையில், 60 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
மேலும், புதிய வரைபடம் செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரையப்படுகின்றது. இந்நிலையிலேயே, இலங்கையில் நிலப்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொறகஹகந்த முன்னர் வனப்பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அது பலநோக்கு நீர்ப்பாசனத் திட்டமாக மாறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், கொழும்பு நகரில் உருவாக்கப்பட்டு வரும் துறைமுக நகர் திட்டம் காரணமாக, கிட்டத்தட்ட 2.6 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு இலங்கையுடன் இணைந்துள்ளதாக நிலஅளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.