இன்று பிரான்சின் வானிலை ஆய்வு மையமான Météo France, தற்பொழுது பிரான்சின் வடக்குப் பகுதி மாவட்டங்களையும், முக்கியமாக பா-து-கலேயினையும் (Pas-de-Calais), பெரும் புயற்காற்று எச்சரிக்கைக்குள் தள்ளி உள்ளது.
இந்தப் பா-து-கலேயில் உள்ள கலே நகரத்தில், வெறும் கூடாரங்களிற்குள் இருக்கும் அகதிகள் பெரும் ஆபத்திற்குள்ளாகும் நிலைமை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு மணிக்கு 100 முதல் 120 கிலோமீற்றர்களிற்கும் அதிகமாகப் பெரும் புயற்காற்று இன்று இரவும் நாளை காலையும் வீச உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சொம் (Somme) மாவட்டங்களிலும் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் புயற்காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Haute-Corse, la Corse-du-Sud, le Var, les Alpes-Maritimes ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட செம்மஞ்சள் எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.