யாழ்ப்பாணம், நல்லூர் கிட்டு பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. இன்று கரிநாள் என்பதாலேயே இந்தப் பரப்புரைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று கட்சி உள்வீட்டுத் தகவல்கள் தெரிவித்தன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பரப்புரைக்கு 24 நாட்களே இன்னமும் உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க பரப்புரைக் கூட்டத்தை இன்னும் நடத்தவில்லை.நல்லூர் கிட்டு பூங்காவில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் அது கைவிடப்பட்டது.
இன்று கரிநாள் என்பதாலேயே இந்தக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது என்று கட்சியின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை இன்னமும் தயாரித்து முடிக்கப்படாமையாலேயே இந்தக் கூட்டம் பிற்போடப்பட்டது என்று மற்றொரு தகவல் தெரிவித்தது.