உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பல கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் நடந்த சோதனையில் ஒரு அறை முழுக்க பணம் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் மதிப்பிழந்த பழைய ரூபாய் நோட்டுகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஆங்காங்கே பழைய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்ற நிலையில், தற்போது அறை முழுவதும் ரூபாய் நோட்டுகள் பறிமுதலானது அதிர்ச்சி அளிப்பதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளனர். பறிமுதல் செய்த ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.