இந்தியா – பாக்., இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை தணிக்கும் வகையில், இரு நாடுகளின் ராணுவ பணிகளுக்கான, பொது இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சு நடத்துவது குறித்து, பாக்., அரசு பரிசீலிக்கிறது.
இது குறித்து, பாக்., ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி: இந்தியா – பாக்., நாடுகளின் எல்லை பகுதிகளில் அடிக்கடி நடக்கும் தாக்குதல்களால், இரு நாடுகளிடையே பதற்றம் நிலவுகிறது.
2013 டிசம்பரில், இத்தகைய சூழ்நிலையில், இரு நாடுகளின் ராணுவ பணிகளுக்கான, பொது இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டது.
அதே போன்று, தற்போதும் பேச்சு நடத்தி, பதற்றத்தை தணிப்பது குறித்து, பாக்., அரசு பரிசீலிக்கிறது. பாக்., ராணுவ அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், இத்தகவலை கூறியதாக தெரிகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் எல்லையில், பாக்., ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால், நம்
தரப்பில் உயிர் பலி ஏற்படுகிறது.
இதற்கு பதிலடி தரும் வகையில், நம் ராணுவ வீரர்கள், சமீபத்தில்,
பாக்., எல்லைக்குள் அதிரடியாக நடத்திய தாக்குதலில், பாக்., வீரர்கள்
ஏழு பேர் உயிரிழந்தனர்; ஐந்து பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பேச்சு நடத்துவது குறித்து, பாக்., பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.