செவ்வாய்க்கிழமை, பா-து-கலேக்கு வியஜம் மேற்கொண்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ‘சட்டவிரோத குடியேற்றங்களை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்!’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கலே காட்டுப்பகுதியில் அகதிகள் குடியேற்றங்களை காவல்துறையினர் மிக மோசமான முறையில் அகற்றி வருவதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் பல தொண்டு நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியிருந்தன. இந்நிலையில் இன்று கலேயின் குடியேற்றப்பகுதிக்கு முதன் முதலாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன் போது இம்மானுவல் மக்ரோன் தெரிவித்ததாவது, ‘நாம் கலே பகுதி உட்பட எங்கேயும், சட்டவிரோதமாக அமைக்கப்படும் தங்குமிடங்களையோ, கூடாரங்களையோ ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதேவேளை அனைத்து அகதிகளுக்கு தங்குமிடங்கள் அமைத்துத்தரப்படும். கலே காட்டுப்பகுதியில் தங்குமிடம் ஒருபோதும் அமைத்துத்தரப்பட மாட்டாது!’ என குறிப்பிட்டார்.