பிள்ளைகள் மீதான வன்முறையை எதிர்த்து இரு புதிய விழிப்புணர்வுக் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் காணொளிகளை குழந்தைகள் நலத் தொண்டு நிறுவனமான La Fondation pour l’Enfan வெளியிட்டுள்ளது.
கடினமான சொற்கள், குழந்தைகள், பிள்ளைகளின் அதிர்ச்சிகள், அவர்களது மன விரக்திகள் என்பன காணொளிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் காணொளிகளானது எதிர்வரும் 23ம் திகதி, இணையத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் திரையரங்கங்களிலும் வெளியிடப்பட உள்ளன.
‘குழந்தைகளை அடிப்பது, திட்டுவது வன்முறையை உபயோகிப்பது என்பது, நாளை அந்தப் பிள்ளைகள் வளர்ந்து, நீங்கள் கொடுத்த வன்முறையை மற்றவர்கள் மீது பிரயோகிக்கும் நிலை ஏற்படும். இதனால் வன்முறையாளனாகக் குற்றவாளியாக அவன் உருவாகுவான். இதனால் வன்முறையைற்ற சமூகத்தை உருவாக்க இந்தக் காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளன்’ என இந்தத் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து இயங்கும் உளவியல் மருத்துவர் Gilles Lazimi தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளிலும் பிள்ளைகள் மீதான வன்முறைகள் முற்றிலும் தடுக்கப்படல் வேண்டும் என்றும் இந்தக் காணொளியின் பிரச்சாரம் அமைந்துள்ளது.