நாகார்ஜூனா – கார்த்தி இணைந்து நடித்த படம் தோழா. இந்த படம் தெலுங்கில் ஊபிரி என்ற பெயரில் வெளியானது. வம்சி இயக்கத்தில் 2016ல் வெளியான அந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே வெற்றி பெற்றது. அதன்பிறகு ஓம் நமோ வெங்கடேசாய, ராஜூ ஹரி ஹாதி-2 ஆகிய தெலுங்கு படங்களில் நடித்த நாகார்ஜூனா, அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
மல்டி ஹீரோ கதையில் உருவாகும் அந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் நானியும் நடிக்கிறார். அவர்களுடன் இன்னொரு முன்னணி தமிழ் நடிகரை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வந்த நிலையில், தற்போது தனுஷிடம் அந்த படத்தில் நடிக்க பேசியிருக்கிறார்கள்.