மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு. தெலுங்கில் பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில நடித்து வரும் இவர், சீரியல்கள் தயாரித்து வந்தவர், தற்போது படங்களையும் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்.
தற்போது அவர் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். ஒய்ப் ஆப்ராம் என்று டைட்டீல் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் லட்சுமி மஞ்சு கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, சாம்ராட், பிரியதர்ஷி, ஸ்ரீகாந்த் அய்யங்கார் என பலர் நடிக்கிறார்கள்.
பொய்யானவர்களை நம்பி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பெண்ணை மையப்படுத்தி இந்த படம் தயாராகிறது. இப்படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலியிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய் யெலகாந்தி இயக்குகிறார்.