கடந்த 11 ஆம் திகதி, பா-து-கலே சிறைச்சாலையில் இரு அதிகாரிகளை கைதி ஒருவர் தாக்கிய சம்பவத்தின் பின்னர், நேற்று திங்கட்கிழமை மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று திங்கட்கிழமை, Landes மாவட்டத்தின்
Mont-de-Marsan இல் உள்ள சிறைச்சலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு சிறைக்கைதி ஒருவர் ஏழு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். விசாரணைகளில், இது பயங்கரவாதம் தொடர்பான தாக்குதல் இல்லை எனவும், அதிகாரிகளை தனிப்பட்ட காரணங்களுக்காக தாக்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சிறைச்சாலையில் அதிகாரிகள் தாக்கப்படுவதைத் தொடர்ந்து, பல்வேறு சிறைச்சாலைகளில் பணிபுரியும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.