ஜெருசலேம், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்புக்கு எதிராக கருத்து கூறிய, பாலஸ்தீன தலைவர், அப்பாசுக்கு, இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய நகரான, ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகராக, சமீபத்தில், அமெரிக்கா அங்கீகரித்தது. இதற்கு, பல முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக, பாலஸ்தீன அதிபர், மஹ்மூத் அப்பாஸ் கூறுகையில், ‘இஸ்ரேலுடன் பேச்சு நடத்த மாட்டோம் என, நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை.
மாறாக, ஜெருசலேமை, இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது கண்டனத்துக்கு உரியது. அமெரிக்க அதிபரின் வீடு அழியட்டும்’ என்றார்.இதற்கு, இஸ்ரேல் ராணுவ அமைச்சர், அவிக்டர் லைபர்மேன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ராணுவ ரேடியோவில் பேசிய அவர் கூறுகையில், ‘பாலஸ்தீன அதிபர், அறிவை இழந்துள்ளார். பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண்பதில், அவருக்கு உடன்பாடு இல்லை என்பது தெளிவாகி உள்ளது. மாறாக, இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான மோதல் போக்கை கையாள, அவர் திட்டமிட்டு உள்ளது தெரிகிறது’ என்றார்.