ஐயா படம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. கமல் தவிர்த்து பரவலாக தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். முன்பு போன்று டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல் கதையின் நாயகியாக வலம் வர தொடங்கி உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வெளியான அறம் படம் அமோக வரவேற்பை பெற்றதுடன், நயன்தாராவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நயன்தாரா.
அவரிடத்தில், உங்களின் பேவரிட் ஹீரோ யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, எனது பேவரிட் ஹீரோ எப்போதுமே அஜித் என்று கூறியவர், விஜய்யும் எனக்கு பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.