இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயின் புதிய அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்பதியடைந்த அந்நாட்டு கல்வி அமைச்சர் ஜஸ்டின் கிரீனிங் பதவி விலகியுள்ளார்.
பிரதமர் தெரசா மே நேற்ற தனது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ஜஸ்டின் கிரீனிங்கை ஓய்வூதியத்துறை அமைச்சராக நியமிக்க தீர்மானித்தார். இந்நிலையில், ஜஸ்டின் கிரீனிங் குறித்த தீர்மானத்தை ஏற்க மறுத்து பதவி விலகியுள்ளதுடன், தனது இராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பிவைத்துள்ளார்.
இதேவேளை, புதிய கல்வி அமைச்சராக டேமியன் ஹிண்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவை மாற்றங்களின் பிரகாரம், எஸ்தர் மெக்வேயு பணியாளர், ஓய்வூதியத்துறை அமைச்சராகவும், மேத் ஹான்காக் கலாசார அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
எனினும் இந்த அமைச்சரவை மாற்றத்தில், உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், ஷபிரிக்ஜிட் துறை அமைச்சர் டேவிட் டேவிஸ், வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் ஆகியோரது துறைகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.