இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு, கச்சதீவு போன்ற கடல்பகுதிகளில் வைத்து இலங்கை கடற்படையினரால் கடந்த வருட இறுதிப் பகுதிகளில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களின் வழக்கு விசாரணை நேற்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ஆஜர்ப்படுத்தப்பட்ட 54 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் எம்.ரியால் உத்தரவிட்டார்.