அபுதாபி சர்வதேச விமானநிலையத்தின் “பிக் டிக்கெட்” என்ற லாட்டரி போட்டியில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தாயகமாக கொண்ட ஹரி கிரிஷனிற்கு 12 மில்லியன் திர்காம் ( இந்திய மதிப்பில் 20.8 கோடி) பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக, ஹரி கிரிஷன் கூறியதாவது, தான் இதுவரை 3 முறை இந்த பிக் டிக்கெட் லாட்டரி வாங்கியுள்ளேன். 3வது முறை வாங்கும்போது பரிசு கிடைத்துள்ளது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் பணியில் இருந்தபோது, ரேடியோக்களிலும், சில மீடியாக்களிலும் எனது பெயர் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு வந்தது. எனது மனைவியும் அதை உறுதிப்படுத்தினார். இதன்பிறகே, இது உண்மை என்பதை நான் உணர்ந்தேன்.
பிப்ரவரி 5ம் தேதி, பரிசுப்பணம் வரும் என்று நினைக்கிறேன். இந்த பணத்தை கொண்டு குழந்தைகளின் படிப்பு மற்றும் ஓய்வுக்கு பிந்தைய தேவைகளுக்கு பயன்படுத்த இருப்பதாக ஹரி கிரிஷன் தெரிவித்தார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஹரி கிரிஷன், இவ்வார இறுதியில் கேரளா வர இருப்பது குறிப்பிடத்தக்கது.