சட்டம், ஒழுங்குக்குப் பொறுப்பாக புதிய அமைச்சரொருவர் ஜனாதிபதியால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டார் அல்லவா? அவர் நியமிக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி தரப்பிலிருந்து பிரதமர் தரப்புக்கு இறுதிநேரம் வரை எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லையாம். அதென்ன மேட்டர்…
சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்குகூட இந்தப் புதிய இராஜாங்க அமைச்சர் விவகாரம் இறுதிநேரம் வரை தெரியாதாம்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் லடாய் இந்த நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.