எதிர்வரும் நாட்களில் கனடாவின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கனடா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக கனடாவின் பல பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் ஒட்டாவில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், மேற்கு ஒட்டாவா பகுதியில் 10 செ.மீ வரையிலும் பனிப்பொழிவு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கனடா வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கிப்க்ஸ்டன் மற்றும் கோர்ன்வால், கிழக்கு ஒன்றாரியோ பகுதிகளில் -6 செல்சியஸ் டிகிரி அளவு வெப்பநிலையே பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று குறித்த பகுதிகளில் இன்று (திங்கற்கிழமை) முதல் பனிப்பொழிவு அதிகரிப்பதை அவதானிக்க முடியும் எனவும் வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.