ஈரான் நாட்டில் ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில பாடம் நடத்தக்கூடாது என அந்நாட்டு முஸ்லீம் தலைவர்கள் விடுத்த எச்சரிக்கையை அடுத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது உயர்கல்வி துறை கவுன்சிலின் தலைவர் மெஹ்தி நவித் ஆதம் டிவி நிகழ்ச்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: அரசு மற்றும் அரசு சாரா துவக்க பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பது , மேற்கத்திய மொழி கலாச்சார ஆக்கிரமிப்பிற்கு வழி திறக்கப்படுவதாகவும், சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது எனவும் எச்சரித்து தலைவர்கள் ஆங்கிலம் கற்பிக்க தடை விதித்துள்ளனர். இந்த தடை உத்தரவு ஞாயிறு முதல் அமலுக்கு வந்தாக கூறினார்.
ஈரான்பள்ளிகளில் 12 வயது முதல் தான் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. சில குழந்தைகள் பள்ளிக்கு பின்னர் பிறமொழி கற்று தரும் மையங்களுக்கு சென்று ஆங்கிலம் கற்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் உயர் கல்வியின் போது தான் ஆங்கிலம் கற்று கொள்கின்றனர்.