கிழக்கு சீன கடல்பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றும், சரக்கு கப்பல் ஒன்றும் மோதிக் கொண்டதில், 32 ஊழியர்கள் மாயமாகி உள்ளனர்.
அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிழக்கு சீனா கடல்பகுதியில் 160 கி.மீ. தூரத்தில், பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்று 1,36,000 டன் கச்சா எண்ணெய்யுடன் சென்று ெகாண்டிருந்தது.
இதேபோல் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று எதிர்பக்கத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த இரு கப்பல்களும் நேற்று முன்தினம் இரவு நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இச்சம்பவத்தில் எண்ணெய் கப்பலில் இருந்த 32 ஊழியர்கள் மாயமாகினர். எனினும், சரக்கு கப்பலில் இருந்த 21 ஊழியர்களுக்கும் எந்த ஆபத்தும் இன்றி உயிர்தப்பினர். அவர்கள் அனைவரும் சீன ரோந்து கப்பல்களால் காப்பற்றப்பட்டனர்.
மேலும், காணாமல் போன எண்ணெய் கப்பல் ஊழியர்களை மீட்கும் பணியில் 8 சீன படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அண்டையில் உள்ள தென்கொரியாவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.