மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் அறிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காற்றின் ஊடாகப் பரவுவதற்கு வாய்ப்புள்ளதனால் மக்களை அவதானமாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் நெருக்கமாகக் கூடுகின்ற பகுதிகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவில் தொற்றுக் காய்ச்சல் பரவிவரும் நிலையில், அங்குள்ள வைத்தியசாலைகளுக்கு அமைச்சர் நேரில் சென்று ஆராய்ந்த பின்னரே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்குள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் குறித்த நோயினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.