இதோ போட போறேன், அதோ போட போறேன்’ என்று அணு ஆயுதத்தை வைத்துக் கொண்டு டிரம்ப்பும் கிம்மும் உலகத்தையே மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வட கொரியாவை சேர்ந்த குழந்தை சாமிக்கு எதை பார்த்து பயம் என்று தெரியவில்லை.
ஆனால் அமெரிக்க அதிபருக்கு தெனாலி கமல் போல எதை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. காலையில் பல் விளக்க கூட அவர் பயப்படுவார் என்று கூறப்படுகிறது.
டிரம்ப் குறித்து மைக்கேல் வுல்ப் என்ற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கும் ‘பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்’ என்ற புத்தகத்தில் தான் இந்த விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. டிரம்ப் எப்படி எல்லாம் தன்னுடைய உயிரை காத்துக் கொள்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இவர் தன்னுடைய பல் துலக்கும் பிரஷ் குறித்து மிகவும் கவனமாக இருக்கிறார். யாரும் தன்னுடைய பிரஷை கையால் தொடக்கூடாது என்று விதி வைத்து இருக்கிறார். பாத்ரூமில் எத்தனை டிகிரி கோணத்தில் பிரஷ் இருக்கிறதோ அப்படியே இருக்க வேண்டுமாம். யாரும் பிரஷில் விஷம் வைத்து தன்னை கொள்ள கூடாது என்று இந்த விதிஅதேபோல் அவர் தனது சட்டையை அதிகமாக தரையில் தான் போடுவார் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதை எடுத்து யாரும் அடுக்கி வைக்க கூடாதாம். அதில் ஏதாவது ஊசி வைத்து தன்னை கொன்று விடுவார்கள் என்பதால் இப்படி வித்தியாச வித்தியாசமாக செயல்படுகிறார் டிரம்ப்.இவர் தன்னுடைய உணவை சோதிக்கவும் ஆட்கள் வைத்து இருக்கிறார். அதே சமயத்தில் சந்தேகம் வரும் போது வெளியே சென்று ‘மெக் டொனால்ட்ஸ்’ உணவகத்தில் சாப்பிடுவார் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது மக்களை சந்திக்க இல்லை என்றும் அவருடைய உயிருக்கு பயந்துதான் என்றும் உண்மை வெளியாகி இருக்கிறது.தன்னுடைய உயிரை பாதுகாத்துக் கொள்ள இவர் தனி குழு அமைத்து இருக்கிறார். இவர்கள் மட்டும் தான் இதெல்லாம் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டிரம்பிற்கு மனநோய் இருக்கிறது அதனால் தான் இப்படி பைத்தியகார தனம் எல்லாம் செய்கிறார் என்று அமெரிக்காவில் பலர் விமர்சனம் வைத்து இருக்கின்றனர்.