மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி அறிக்கை குறித்து நாடாளுமன்றில் விவாதிப்பதற்கான திகதியை முடிவு செய்யும் வகையில் கட்சி தலைவர்களுடனான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த கட்சி தலைவர்களுடனான கூட்டமானது எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ளது.
பிணைமுறி மோசடி அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற அமர்வை கூட்டுமாறு கட்சித் தலைவர்கள் கோரியிருந்தனர்.
அதற்கமைய இக்கூட்டத்தை நடத்த நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.