அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குறித்து யாருக்கும் தெரியாத அந்தரங்க விடயங்கள் அவர் பற்றி வெளியாகியுள்ள புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் பிரபல பத்திரிக்கையாளர் மைக்கேல் உல்ப் 18 மாதங்களாக டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களிடம் பேட்டி எடுத்துள்ளார்.
அதில் கிடைத்த விபரங்களை சேகரித்து Fire and Fury: Inside the Trumps White House என்ற புத்தகத்தை மைக்கேல் எழுதியுள்ளார்.
தற்போது இந்த புத்தகம் டிரம்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
அதில், ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவது அவருக்கே கூட சந்தேகமாகத் தான் இருந்துள்ளது.
வெள்ளை மாளிகையை பார்த்து டிரம்ப் இப்போதும் பயப்படுவதாகவும் அங்கு இருக்க அவருக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டிரம்ப் தன்னுடைய நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார் என்று கூறப்பட்டு இருக்கிறது.
தன் நண்பர்களை எப்படி எல்லாம் அவர் ஏமாற்றுவார் என்றும் இந்த புத்தகத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் பேட்டி அளித்துள்ளனர்.
மேலும் டிரம்பின் சட்டைகளையும் யாரும் தொடக்கூடாது, யாராவது இதன் மூலம் தன் உடலில் விஷத்தை செலுத்தி கொன்று விட முடியும் என்று அவர் சந்தேகப்பட்டு இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.இதோடு டிரம்ப் குடும்பத்தாரே அவர் தேர்தலில் தோற்க வேண்டும் என நினைத்துள்ளனர்.
இதன் மூலம் டிரம்ப் மகள் இவாங்கா பெரிய ஆளாக மாறமுடியும், மேலும் இவாங்கா கணவர் ஜெராட் குஷ்னரும் பிரபல மனிதராக மாற முடியும் என்று கூறப்பட்டு உள்ளது.
தற்போது டிரம்பை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்கி இவாங்கா அந்த பதவியை பிடிக்க எல்லா திட்டத்தையும் தயார் செய்துவிட்டதாகவும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.