தென்னாப்பிரிக்காவில், தனியார் ரயில் நிறுவனமான சோசோலோஜா மெல், நீண்ட தூர ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் ரயில் ஒன்று, போர் எலிசபெத் நகரில் இருந்து ஜோகன்னஸ்பர்க்குக்கு இயக்கப்படுகிறது.
இந்த ரயில் நேற்று மதியம், ஹெனன்மேன் ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கேட்டில் லாரி ஒன்று திடீரென்று நுழைந்தது.இதில் ரயில் அதன் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த மோதலில் ரயில் பெட்டிகள், தூக்கிவிசிறியடிக்கப்பட்டன.
இச்சம்பவத்தில் 14 பேர் இறந்தனர். 180க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் ்அடைந்தனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிகிச்சையில் உள்ள லாரி டிரைவர், சம்பவத்தின்போது மதுபோதையில் இருந்தாரா என விசாரணை நடக்கிறது.