வன்னியில் யுத்தம் இடம்பெற்ற சூழலில் இலங்கை அரச பயங்கர வாதத்தின் ஊது குழலாக செயற்பட்ட இலங்கை ஊடகமான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் வரும் இருபதாம் திகதி தமிழர் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை கொண்டாட
கனடாவிற்கு அழைக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்கும், விமர்சனத்துக்கும் உரிய செயலாகும்.
ஒவ்வொரு தமிழனும் குரல் வளை நசுக்கப்பட்டு வன்னியில் மடியும்போது கண்மூடி இருந்த தமிழ் கட்சிகளும் ,அரச ஊடகங்களும் இன்று மேடை ஏறி விழா காணுகின்றனர் .
இவர்களை கனடா வாழ் தமிழ் சமூகம் முற்றாக எதிர்க்கிறது.
எதிர்ப்பையும் மீறி ரூபவாஹினி கூட்டுதாபனத்தினர் விழாவிற்கு அழைக்கப்படின் தாம் வீதியில் இறங்கி போராட தயாராக இருப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
உண்மையையும் நீதியையும் மறைக்கும் எந்த செயற்பாடும் தமிழினத்துக்கு கேடு விளைவிக்கும் செயற்பாடே . இப்படியான நடு நிலையற்ற பயங்கரவாத அரச ஒத்தூதும் ஊடகங்களை தமிழ் தரப்பினர் கொண்டாடுவது மிக இழிவான விடயமும் ,எம் இனத்திற்கு நாம் இளைக்கும் பாரிய வரலாற்று குற்றமுமாகும் .
இதனை விழா ஏற்பாட்டுக்குழுவினர் கருத்தில் கொள்ளவேண்டும் என்று ஊடகம் சார்பானவர்களும் இன அக்கறை உள்ளவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.