சமூக வலைதளமான பேஸ்புக்கில் 2017-ம் ஆண்டில் மிகவும் அதிகம் பேசப்பட்ட எம்.பி.க்களில் பிரதமர் மோடியும், சச்சினும் இடம் பெற்றுள்ளனர்.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் 2017-ம் ஆண்டில் மிகவும் கருத்துகள் பகிர்தல், கலந்துரையாடுதல், பின்தொடர்தல் ஆகியவை குறித்த ஆய்வு நேற்று வெளியானது.
அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது,
2017-ம் ஆண்டில் லோக்சபா எம்.பி.களில் பிரதமர் மோடியும், ராஜ்யசபா எம்.பி.க்களில் மாஜி கிரிக்கெட் வீரர் சச்சினும் பேஸ்புக்கில்மிகவும் அதிகம் பேசப்பட்டவர்களாக இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்து ஆர்.கே. சின்ஹா, அமித்ஷா, அசாதுதீன் ஓவெய்சி, பகவத் மான் ஆகியோரும் அதிகம் பேசப்பட்டனர்.
இவற்றை தவிர பிரதமர் அலுவலகத்தை பின் தொடர்பவர்கள் 13.74 மில்லியன், மற்றும் பேஸ்புக்கில் லைக் செய்பவர்கள் 13.83 மில்லியன் எனவும், ஜனாதிபதி ராம்நாத்தை பின்தொடர்பவர்கள் 4.88 மில்லியன், மற்றும் லைக் செய்பவர்கள் 4.9 மில்லியன் எனவும் , மாநில அரசுகளில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் மிகவும் பிரபலமான அரசு எனவும் மிகவும் பேசப்படும் கட்சிகளில் பா.ஜ., ஆம் ஆத்மி , காங்.ஆகிய கட்சிகள் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.