பயங்கரவாதத்தை ஒழிப்பதாக கூறி, பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தனக்கு பக்கபலமாக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. அமெரிக்காவின் ராணுவ நிதி உதவி பெறும் நாடுகளில் பாகிஸ்தானும் திகழ்கிறது. ஆனால் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது.
பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.இது அமெரிக்காவுக்கு அந்த நாட்டின் மீது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவுக்காக எதுவும் செய்யவில்லை.
நிதி உதவி பெறுவற்காக அமெரிக்காவிடம் பொய் கூறி ஏமாற்றி விட்டது. கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 2 லட்சம் கோடி கொடுத்தது வீண்’என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்கா வழங்க இருந்த 1,621 கோடி (225 மில்லியன் டாலர்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிரம்பும் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க தூதர் நிக்கி ஹாலேவும் பாகிஸ்தான் டபுள் கேம் ஆடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 255 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டு வந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போராடி வந்த பாகிஸ்தான், மறுபுறம், பயங்கரவாதிகளை உற்பத்தி செய்தது.
அவர்கள் ஆப்கனில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த இரட்டை வேடத்தை அமெரிக்க அரசு ஏற்று கொள்ளாது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தும் வரை அந்நாட்டுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்க நிறுத்த உள்ளது என்றார்.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தான் எதிராக மேலும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.