பிரேசிலின் கோய்யாஸ் மகாணத்தில் உள்ள சிறையில் சிறைக்கைதிகள் இடையே நடைபெற்ற மோதலில் 9 கைதிகள் உயிரிழந்தனர்.
காலோனியா சிறையில் இருதரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு தீ வைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்றன. மோதலில் சிறைக்கைதிகள் 9 பேர் கொல்லப்பட்டனர்.
உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது 106 சிறைக்கைதிகள் தப்பிச்சென்றனர்.
அவர்களில் 29 பேர் பிடிப்பட்டனர். சிறையில் போதிய பாதுகாப்பு இல்லாததே இந்த மோதலுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.