இலங்கையில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள வசதிகளைக் கொண்ட நவீன நகரமொன்றை நிர்மாணிக்கவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நகரமானது இரண்டு இலட்சம் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமையவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டங்களை நேற்று பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கூறுகையில்,
“சீனா துறைமுக நிறுவனத்தினால் கடல் நிலத்தை நிரப்பி இன்னும் 99 வருடங்களில் இந்த இடத்தில் நகரம் ஒன்றை ஏற்படுத்துவதுடன், இரண்டு இலட்சம் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில் மிகவும் அழகான நவீன முறையில் அந்த நகரத்தை நிர்மாணிப்போம்.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும் வசதிகள் அனைத்தும் இந்த நகரத்திற்கு பெற்றுக் கொடுப்பதுடன், இது சீன துறைமுக நிறுவனத்தின் பிரதான முதலீடாகும்.
அத்துடன் 2020ஆகும் போது இந்த துறைமுக நகரத்தின் அடிப்படை வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய கட்டட வேலைகளை பூர்த்தி செய்ய இருக்கின்றோம்.
இதன் மூலம் நாங்கள் நினைத்தும் பார்க்க முடியாத நகரம் ஒன்று இங்கு அமையப்போகின்றது. இது இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையத்திற்கான வேலைத்திட்டங்களில் ஒரு பகுதியாகும்” என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.