நேற்று புனேவில் நடந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர். தலித் மக்கள் நடத்தும் ஒரு நினைவு நிகழ்ச்சியின் போது, இந்த சம்பவம் நடைபெற்றது. நேற்று அரங்கேறிய வன்முறைகளை எதிர்த்து இன்று மும்பையில் போராட்டம் நடத்த தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதைத் தொடர்ந்து, மும்பையில் பல பகுதிகளில் தலித் மக்கள் கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளை முடக்கி போராட்டம் நடந்ததால், பல இடங்களில் மைல் நீளத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது